search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக நிர்வாகி கைது"

    • கடையில் கள்ளத்தனமக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவங்கள், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி., ராஜூ தலைமையில், கலால்துறை உதவி கமிஷனர் செல்வி, இன்ஸ்பெக்டர் அம்பிகா, எஸ்.ஐ.முருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் காரணமாக, மாவட்டத்தில் லைசென்ஸ் இல்லாத பார்கள், சந்துக் கடைகள் பெருமளவில் குறைந்துள்ளன. இருந்தும், ஆங்காங்கே ஒரு சில சந்துக் கடைகளில், கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது.

    இந்த நிலையில், மோகனூர் அடுத்த ஆண்டாபுரம் பகுதியில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், மோகனூர் எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அப்பகுதியில் மளிகை கடை நடத்திவரும், தி.மு.க கிளை செயலாளர் குமரவேல் (42) என்பவர், தனது கடையில் கள்ளத்தனமக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மளிகை கடையில் இருந்து, மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தி குறித்து சில அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
    • பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் பொம்மு சுப்பையா தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் கார்த்திக். இவர் தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகியாக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தி குறித்து சில அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    இது குறித்து பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் பொம்மு சுப்பையா தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் லோகேஷ் கார்த்திக்கை கைது செய்தனர்.

    ×